சினிமா நடிகைகளோ அல்லது சினிமா சம்பந்தப்பட பிரபலங்களோ பிராணிகள் நல அமைப்புல உறுப்பினரா சேர்ந்தாலே, அடுத்ததா அவங்க ஜல்லிக்கட்டுக்கு எதிரா வாயை விட்ருவாங்களோ அப்புறம் வாங்கிக்கட்டிக்குவாங்களோன்னு ஒரு ‘திக் திக்கை உண்டாக்கிட்டாங்க.. காரணம் அவங்களுக்கு பிராணிகளை சித்தரவதை படுத்துறதுக்கும் காளையை அடக்குற ஜல்லிக்கட்டுக்குமான வித்தியாசம் தெரியாததுதான்.
இப்ப ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு விலங்குகள் நல அமைப்பின் தூதரா பதவி கெடைச்சதுமே வாழ்த்துச்சொன்னவங்களை விட, வசை பாடுனவங்கதான் அதிகா இருக்கும்.. காரணம் ரஜினி மகளா இருந்துட்டு இந்த பொண்ணும் தேவையில்லாம ஜல்லிக்கட்டுக்கு எதிரா ஏதாவது கருத்தை சொல்லிருமோன்னு ஒரு பயம் தான்.
இதை மனசுல வச்சுக்கிட்டு திருச்சில சௌந்தர்யாவோட உருவ பொம்மையெல்லாம் சில முட்டாளுங்க ஆர்வக்கோளாறுல எரிச்சிருக்காங்க.. சிலர் சௌந்தர்யா இந்த பதவியிலிருந்து விலகணும்னு போர்க்கொடி தூக்குனாங்க ஆனால் சௌந்தர்யா உடனே தலையிட்டு தன்னை எதுக்காக அந்த பதவிக்கு தேர்ந்தேடுத்திருக்காங்கன்னு டீடெய்லா சொல்லிட்டாரு..
அதாவது சௌந்தர்யாவுக்கு கிராபிக்ஸ், அனிமேஷன் பீல்டுல அனுபவம் இருக்கிறதால, நம்ம சினிமாப்படங்கள்ல விலங்குகளை வச்சு எடுக்கப்படுற காட்சி உண்மையானதா இல்ல அனிமேஷனான்னு செக் பண்ணி சர்டிபிகேட் கொடுக்குறது மட்டும் தான் அவரோட வேலையாம்.. இது என்னான்னு தெரியுறதுக்குள்ளே சௌந்தர்யாவ சந்தேகப்பட்டுட்டாங்களே அவசரக்குடுக்கைங்க..