கபாலி’ படமே இணையதளத்தில் லீக்காகிவிட்டதாக ஒரு பக்கம் பரபரப்பு கிளம்ப, இன்னொரு பக்கம்மோ உண்மையிலேயே கபாலி படத்தின் முதல் இரண்டு நிமிட காட்சி அதாவது ரஜினி இன்ட்ரோ காட்சி ஒன்று வாட்ஸ் அப்பில் உண்மையிலேயே லீக்கானது. அமெரிக்காவில் ரஜினியுடன் சேர்ந்து படம் பார்த்த ஒருவர் அதனை படம்பிடித்து ஆர்வக்கோளாறில் லீக் பண்ணியதாக சொல்லப்படுகிறது.
இந்த ரணகளமான சூழலுக்கு முன்பு அதாவது இந்த இரண்டு நிமிட காட்சி லீக்காவதற்கு முன்பு இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில் கபாலி படத்தின் முதல் 45 வினாடி கட்சி லீக்கானது என ஒரு வீடியோவை பதிவிட்டார்.. எப்போதுமே திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுக்கும் இவர் இதையெல்லாம் ஊக்குவிக்க மாட்டாரே என நினைத்து அந்த வீடியோவை க்ளிக் பண்ணினால்..
அட.. “புகைபிடிப்பது தீங்கு விளைவிக்கும்’ என ஆரம்பத்தில் போடுவார்களே… அந்த வீடியோ தான் அது.. பார்த்திபன் என்றாலே குறும்பு தானே..