ரஜினி ட்விட்டர் கணக்கை ஹேக்கிங் செய்த விஷமி..!


பிரபலமானவர்களின் ட்விட்டர், பேஸ்புக் கணக்குகளை விஷமிகள் அவ்வபோது ஹேக்கிங் செய்வது தொடர்கதையாகி வருகிறது. நேற்றுமுன் தினம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ட்விட்டர் கணக்கு யாரோ ஒரு விஷமியால் ஹேக்கிங் செய்யப்பட்டது.

அதில் “Rajinikanth #HitToKill”. என அவரே ட்வீட் செய்திருப்பதை போல ஒரு ட்வீட்டை போட அதை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின்தான் ரஜினியின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் சில மணி நேரங்களில் கழித்து, அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டதாக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்தார்.

இப்படித்தான் இரண்டு வருடங்களுக்கு நடிகர் மோகன்லாலின் அதிகாரப்பூர்வ இணையயளத்தையே பாகிஸ்தானை சேர்ந்த சில விஷமிகள் முடக்கினார்கள். அதுமட்டுமல்ல இந்த இணையதள முகவரிக்கு சென்றால் பாகிஸ்தானின் தேசியக்கொடி பறக்கிற மாதிரியும் செட்டிங் பண்ணியிருந்தார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோகன்லாலின் ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் ரயில்வே இணையதளம் மற்றும் இன்னும் இரண்டு இணையதளங்களை முடக்கினார்கள் என்பது வேறு விஷயம்..