காயப்படுத்திய விஜய் ; களிம்பு பூசும் சந்தானம்..!


விஜய் நடித்த தலைவா’ படத்தை தயாரித்தவர் சந்திர பிரகாஷ் ஜெயின்.. ஒருகாலத்தில் படத்தயாரிப்பிலும் படங்களுக்கு பைனான்ஸ் பண்ணுவதிலும் ஓஹோவென கொடிகட்டி பறந்தவர் இவர்.. நீண்ட நாட்கள் இடைவெளிக்குப்பின் தான் படம் எடுக்கவே மீண்டும் உள்ளே வந்தார். வந்தவர் விஜய்யை வைத்து தலைவா’ படத்தை தயாரித்து ரிலீஸ் செய்வதில் ஏகப்பட்ட நெருக்கடிகளை சந்தித்தார்.

ஒருவழியாக படம் ரிலீசானாலும் அந்தப்படத்தில் ஏகப்பட்ட நட்டத்தை சந்தித்தார் சந்திரப்பிரகாஷ் ஜெயின்.. அதன்பின் படத்தயாரிப்பா ஆளைவிடுங்கடா சாமி என ஒதுங்கியே இருந்தவர், இப்போது சந்தானம் நடிக்கும் ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி மீண்டும் கோதாவில் குதித்துள்ளார்..

தலைவா படத்தில் நடித்தபோதே சந்திர பிரகாஷ் ஜெயினுடன் நல்ல நட்பில் இருந்த சந்தானம், தான் நடித்த தில்லுக்கு துட்டு படம் நன்றாக வந்திருப்பதாகவும், தேனனடால் பிலிம்ஸ் படத்தை தயாரித்திருப்பதால் நம்பி தமிழக வெளியீட்டு உரிமையை வாங்குங்கள் என்றும் அவரை ஊக்கப்படுத்தியுள்ளார்… விஜய்யால் இழந்ததை சந்தானத்தின் மூலம் பிடித்துவிடலாம் என நம்பிக்கையாக இருக்கிறாராம் ஜெயின்.