அடுத்த சூப்பர்ஸ்டார் நாங்கள் தான் என விஜய், அஜித் இருவரும் ரஜினியின் இடத்துக்கு பல காலமாக குறிவைத்து நகர்ந்துகொண்டிருக்க, ரஜினியின் மருமகனான தனுஷோ வேறு ரூட்டில் ரஜினியை பின் தொடர்கிறார். அதாவது ரஜினிக்கு ஜோடியாக நடித்த நாயகிகளை தனக்கு ஹீரோயினாக ஜோடி சேர்த்துக்கொள்வது தான் அவரது ‘சூப்பர்ஸ்டார் பாலிசி’.
.இதற்கு முன் ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘குட்டி’ ஆகிய படங்களில் ஸ்ரேயா, ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாரா என ரஜினியின் ஜோடிகளுடன் அவரது மாப்பிள்ளை தனுஷ் இணைந்து நடித்திருக்கிறார் தானே..? அதனாலேயே ‘கபாலி’ நாயகி ராதிகா ஆப்தே தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றால் அதற்காக ஆச்சர்யப்பட தேவையில்லை. இந்த கூத்து எந்தப்படத்தில் என்கிறீர்களா..? கார்த்திக் சுப்புராஜ் டைரக்சனில் புதிய படம் ஒன்றில் தனுஷ் நடிக்க இருக்கிறாரே அதில் தானாம்.