தன்னுடன் இணைந்து ஹிட் கொடுத்தாள் அந்த கதாநாயகியுடன் இரண்டுமுறை இணைந்து நடிக்கலாம் என்கிற பாலிசியைத்தான் சிவகார்த்திகேயன் பின்பற்றி வருகிறார். அந்த அடிப்படையில் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை தொடர்ந்து காக்கி சட்டையில் அவரை தனக்கு ஜோடி சேர்த்தார் சிவகார்த்திகேயன்..
அதேபோல ரஜினி முருகன் வெற்றியை தொடர்ந்து ராசியான ஜோடியாக மாறிய கீர்த்தி சுரேஷை தனது அடுத்த படமான ரெமோ’விலும் ஜோடியாக்கி கொண்டார். ஆனால் ஸ்ரீதிவ்யாவுக்கோ தானும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் என்கிற தீராத ஆசை..
எப்படியோ சிவகார்த்திகேயனை நச்சரித்து ‘ரெமோ’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் வாய்ப்பை வாங்கிவிட்டாராம். இதை அறிந்த கீர்த்தி சுரேஷ், அது எப்படி நான் கதாநாயகியாக நடிக்கும் படத்தில் அவரை சேர்க்கலாம் என சிவகார்த்திகேயனுடன் சண்டைக்கு போய்விட்டாராம். மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்பதுபோல இது என்னடா வம்பா போச்சு என முழித்துக்கொண்டு இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.