நயன்தாராவின் திருமணம் நடக்க சூர்யா எடுத்த முடிவு..!


அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்..? அது மாதிரி நயன்தாரா திருமணத்துக்கும் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என கேட்டீர்களானால் நீங்கள் இன்றைய தலைப்புச்செய்தியை படிக்கவில்லை என்றுதான் அர்த்தம். சூர்யா படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்பது இன்றைய ஹாட் நியூஸ்..

சூர்யாவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது எப்படி..? பின்னே, அதன் சூத்திரதாரி நயன்தாரா அல்லவா..? விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருவதும் திருமணத்திற்கு தயாராகி வருவதும் அவ்வப்போது வெளியாகி வரும் தகவல் தான். ஆனால் அந்த கல்யாணம் எப்போது..?

நானும் ரவுடி தான் என்கிற வெற்றிப்படத்தை கொடுத்தாலும் கூட இன்னொரு மாஸ் ஹீரோவின் படத்தை இயக்கிவிட்டுத்தான் திருமணம் செய்யவேண்டும் என்கிற முடிவில் இருக்கிறாராம் விக்னேஷ் சிவன். அதனால் தான் அஜித்திடம் விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா சிபாரிசு பண்ண, அது வேலைக்காகாமல் போய்விட்டது.

அதன்பின்னர்தான் சூர்யாவுடன் மூன்று படங்கள் இணைந்து நடித்த நட்பின் அடிப்படையில், விக்னேஷ் சிவனிடம் கதை கேளுங்கள் பிடித்திருந்தால் நடியுங்கள் என வேண்டுகோள் வைத்தாராம் நயன்தாரா.. சூர்யாவும் அஜித் மாதிரி பிகு பண்ணாமல் கதைகேட்க, கதைபிடித்து விட்டதால் உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம்..

அதன்பினர்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்தப்படம் முடிந்ததும் தான் தாங்கள் திருமணம் செய்ய இருப்பதாக நயன்தாரா சொன்ன ஒரு விஷயமும் சூர்யாவை இந்தப்படத்தை ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.