நண்பனே உலகம் என வாழும் விக்ராந்த். அவரது நண்பன் அரவிந்துக்கும் அவரது காதலி அபினயவுக்கும் பிரச்சனை ஏற்பட, அதில் தலையிட்டு உள்ளூர் கவுன்சிலரின் பகைக்கு ஆளாகிறார். போராட்டத்தில் நண்பன் உயிரிழக்க, எதிரிகளை தாக்கு தாக்கு என சூரசம்ஹாரம் செய்கிறார்.. இதுநாள் வரை தமிழ்சினிமாவின் நட்பிலக்கணம் பாடிய கதைகளின் அடிச்சுவட்டில் இருந்து, சற்றும் மாறாத இன்னொரு பிதாமகனின் கதை தான் இந்தப்படம்..
விக்ராந்துக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகாது.. ஒகே நோ ப்ராப்ளம்.. நான் சீரியஸா கதை பண்ணிக்கிறேன் என தம்பிக்காக கதை பண்ணி (?) படத்தை இயக்கியுள்ளார் அண்ணன் சஞ்சீவ். அதனால் படம் முழுவதும் சீரியஸ் மோடிலேயே விக்ராந்த் ட்ராவல் பண்ணினாலும் நமக்கு தெரிஞ்சதுதானேப்பா என அந்தக்குறையை கூட ஜஸ்ட் லைக் தட் ஒதுக்கி விடுகிறோம்.
க்ளைமாக்சை நெருங்கும் கடைசி அரைமணி நேர ஆக்சன் காட்சிகள் தான் விக்ராந்துக்கு கைகொடுக்கிறது.. நண்பன் கேரக்டருக்கு சரியாக பொருந்துகிறார். புதுமுகம் அரவிந்த், முழுநீள கதாநாயகியாக அபினயாவுக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனரின் துணிச்சலை பாராட்டலாம்.
வில்லன் கோஷ்டியாக ராகுல் வெங்கட், அருள்தாஸ் கூட்டணியுடன் வில்லனில் நல்லவனாக போஸ் வெங்கட்டும் கச்சிதம். அருள்தாசின் காமெடி கலந்த வில்லத்தனம் சூப்பர். ஏற்கனவே பல படங்களில் பார்த்து சலித்த கதை என்பதால் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அதன் தாக்கம் எதுவும் மனதில் ஏற்படவில்லை என்பதே உண்மை.