அழகிய தமிழ்மகன் பரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.. வழக்கமாக விஜய் படம் ஆரம்பித்த சில நாட்களிலேயே அதன் டைட்டில் பற்றிய பேச்சும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஆரம்பித்துவிடும்.. அந்தவகையில் இந்தபடத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை’ என்கிற டைட்டில் வைக்கப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது..
ஆனால் கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்களுக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி படங்களின் டைட்டில் எவ்வளவு போராடியும் கிடைக்கவே மாட்டேன் என்கிறது. குறிப்பாக ‘வேட்டைக்காரன்’ என்கிற எம்.ஜி.ஆர் டைட்டிலை தனது படத்துக்கு வைத்து அட்டர் பிளாப் ஆக்கியதால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இனி விஜய் படங்களுக்கு டைட்டில் தரக்கூடாது என போர்க்கொடி தூக்கினார்கள்.
ஆனால் இந்தமுறை ‘எங்க வீட்டு பிள்ளை’ டைட்டில் விஜய்க்கு கிடைத்துவிடும் என்றே தெரிகிறது. காரணம் இப்பொது விஜய் படத்தை தயாரித்து வரும் விஜயா புரடக்சன்ஸ் நிறுவனம் தான் எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர் படத்தையும் தயாரித்தது. அதனால் விஜய் படத்திற்கு இந்த டைட்டிலை கைமாற்றுவதில் அவர்களுக்கு என்ன சிரமம் இருக்கப்போகிறது..?