இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் சிம்பு-தனுஷ் இருவருமே முக்கியமான நபர்கள் தான். விக்னேஷ் சிவனுக்கு ‘போடாபோடி’ பட வாய்ப்பை கொடுத்து இயக்குனராக அறிமுகப்படுத்தியதே சிம்பு தான். அதேசமயம் அடுத்த பட வாய்ப்பு இல்லாமல் இருந்த விக்னேஷ் சிவனுக்கு தான் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்து கைதூக்கிவிட்டவர் தனுஷ் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில் பேசிய விக்னேஷ் சிவன், அனிருத் எனக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு தந்தார்.. அவருக்கு நன்றி என கூறினார்.. இந்தப்படத்திலும் அனிருத்தின் இசையில் இரண்டு பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியிருப்பதால் அந்த மேடையில் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
ஆனால் சிம்புவின் ரசிகர்களோ, அதெப்படி சிம்புவின் பெயரை நீங்கள் அங்கே குறிப்பிடாமல் விட்டீர்கள் என சோஷியல் மீடியாவில் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் விக்னேஷ் சிவனோ, “சிம்புவுக்கு நன்றி சொல்லும் மேடையல்ல அது.. அந்த படக்குழுவினருக்கு மட்டும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தேன். சிம்புவுக்காண நன்றியை நான் பலமுறை பெட்டிகளில் சொல்லிவருகிறேன்.. அதையெல்லாம் கவனிக்காமல் விட்டு விட்டு சிம்பு ரசிகர்கள் இப்படி அநாகாரிகமாக நடந்துகொள்வதை தவிர்க்கவேண்டும்” என டென்ஷன் ஆகியுள்ளார் விக்னேஷ் சிவன்.
மேலும் இதுகுறித்து சிம்புவிடமும் முறையிட்டுள்ளார் வினேஷ் சிவன்.. அட.. ரசிகர்களின் கோபமே விக்னேஷ் சிவன், சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாராவை தன் பக்கம் இழுத்துக்கொண்டதால் தானே..?.