“எது வேணாலும் பண்ணுங்க.. ஆனா கிரவுடை மட்டும் என் பக்கத்துல அண்ட விடாதீங்க” என ஒரு படத்தில் வடிவேலு தனது அல்லக்கைகளிடம் காமெடியாக சொல்வாரே, அதுபோலத்தான் விஜய் தற்போது நடித்துவரும் ‘உங்க வீட்டு பிள்ளை’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் ஒரு கலாட்டா நடந்ததாம்.
சமீபத்தில் பொள்ளாச்சி அருகில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ரகசியமாக நடைபெற்று வந்ததாம்.. ஆனாலும் விஜய் படத்தின் படப்பிடிப்பு தான் அது என்பதை எப்படியோ மோப்பம் பிடித்த ரசிகர்கள் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னரே அந்த இடத்திற்கு வந்து குவிந்து விட்டனராம். காரில் ஷூட்டிங் ஸ்பாட் வந்த விஜய், தூரத்திலேயே கூட்டத்தை பார்த்துவிட்டு, இயக்குனரை அழைத்து என்ன இவ்வளவு கூட்டம் என கேட்டாராம்..
இயக்குனர் பரதன் விஷயத்தை சொல்ல, தன்னால் இவ்வளவு கூட்டத்தில் மனமொன்றி நடிக்க முடியாது என கூறிவிட்டாராம் விஜய். பதிலாக “ஷூட்டிங்கை பேக்கப் செய்துவிடுங்கள்.. இந்த காட்சியை சென்னையில் செட் போட்டு படமாக்கி கொள்ளலாம்” என கூறிவிட்டு சென்னை கிளம்பிவிட்டார் எனவும் சொல்லப்படுகிறது.