எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு வருவதற்கு சமமானது சிம்புவையும் ஜெய்யையும் வைத்து படம் இயக்குவது.. தயாரிப்பது.. ரிலீஸ் செய்வது.. எல்லாமே. இந்த ரிஸ்க்கை யாரோ ஓரிருவர் மட்டுமே எடுக்கின்றனர்.. ஜெய்யை வைத்து பலர் படம் எடுத்து கையை சுட்டுக்கொண்ட கதை உங்களுக்கு தெரியும். அவருக்கு ஹிட் கொடுத்த சரவணனே ‘வலியவன்’ படத்தில் அவரால் மோசமாக பாதிக்கப்பட்டார்…
அப்படி இருக்கையில் ஜெய் நடித்த ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்கிற படம் தயாராகி நீண்ட நாட்களாகியும் கூட பிசினஸ் ஆகாமல் பெட்டிக்குள்ளேயே வருடக்கணக்கில் முடங்கி கிடக்கிறது.. காரணம் ஜெய்க்கு மார்க்கெட் போனதுதான். இதில் சந்தானமும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் வெற்றிபெற்றதால் அவருக்கு இருக்கும் பிசினஸ் மவுசை வைத்து படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் தயாரிப்பாளர் தரப்பு இறங்கியுள்ளதாம்.