ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இருமுகன்’. இந்நிலையில் வரும் ஆகஸ்ட்-2ஆம் நடத்தப்பட உள்ள ‘இருமுகன்’ ஆடியோ விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதில் மலையாளம் தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உள்ள பிரபல ஹீரோக்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்க ஏற்பாடுகள் செய்துவிட்டார்களாம்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் படத்தின் நாயகி நயன்தாரா இந்த விழாவில் கலந்துகொள்வாரா இல்லையா என்புதான்.. காரணம் தமிழ், மலையாளம் என எந்த மொழிகளில் நடித்தாலும் அந்தப்படத்தின் புரமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ள மாட்டார். அது அவர் பாலிஸி..
அவ்வளவு ஏன்.. இந்தப்படத்தின் நாயகன் விக்ரமுடன் கடந்த பத்து ஆண்டுகளாக நடிக்க மறுத்து வந்தவர் தானே நயன்தாரா.. இப்போதுதானே போனால் போகட்டும் என்கிற மனோபாவத்துடன் சம்மதித்து நடித்து வருகிறார். ஒருவேளை அதேபோல பிடிவாதம் தளர்த்தி விழாவுக்கு வந்தாலும் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல, ஹாலிவுட்டில் இருந்து அர்னால்ட் எல்லாம் தனது விழாவுக்கு வந்துட்டு போனார்.. படத்தின் ஹீரோயின் நீ கட்டாயம் வந்துதான் ஆகவேண்டும் என நயன்தாராவுக்கு அன்பு கட்டளை.. ஸாரி.. கோரிக்கை வைத்துள்ளாராம் விக்ரம்.. நயன்தாரா இறங்கி வருவாரா பார்க்கலாம்.