திருமண ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, சாதனையாளர் விருது – சங்கமம் 2018..!

திருமண ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, சாதனையாளர் விருது மற்றும் பேஷன் ஷோ ஆகியவை கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக இலங்கேஸ்வரி முருகன் என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இவர் ஒப்பனைக் கலைஞராக 19 வருட அனுபவம் கொண்டவர். அதுமட்டுமல்ல தமிழ்நாடு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்தவர்.

மூத்த ஒப்பனை கலைஞர்கள் மற்றும் அழகு கலை நிபுணர்கள் இந்த நிகழ்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்தவகையில் இந்த துறையில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களும் அழகு கலை நிபுணர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமான நிகழ்ச்சியாக மாற்றினார்கள்.

மொத்த கலை நிபுணர்களும் தங்களது வித்தியாசமான படைப்பாற்றல் மற்றும் கடின உழைப்பால் இந்த நிகழ்ச்சியில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெளிப்படுத்தினர். திருமண ஒப்பனை போட்டிக்கு மாடலாக ஒரு திருநங்கையும் தேர்வுசெய்திருந்தனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் அனைவரும், போட்டியாளர்களின் திறமைகளுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கி, அதன்மூலம் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தது ஒரு மிகச்சிறந்த புதிய வித்தியாசமான நிகழ்வாக அமைந்தது.