சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் சென்னை பல்கலைகழகமும் இணைந்து தேசிய கண்தான வார இறுதி நாள் விழா இன்று (08.09.2016) காலை 8 மணியளவில் சென்னை கடற்கரை உழவர் சிலை அருகில் சென்னையிலுள்ள 10 கல்லூரிகளை சேர்ந்த 1500 மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளும் கண்தான விழிப்புணர்வு நடைபயணத்தை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் அவர்கள், தமிழக காவல்துறை டிஜிபி திரு.ராதாகிருஷ்ணன் IPS அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் சங்கர நேத்ராலயாவின் துணை தலைவர் டாக்டர்.திரு.சுரேந்தர், நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் திரு.ஹேமசந்திரன் அவர்களும் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.