“பறை” ஆல்பம் பாடல் வெளியீடு !

Think Original’s வழங்கும், இயக்குநர் குமரன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைப்பில், உண்மை சம்பவத்தின் பின்ணனியில், சமுக அக்கறையோடு உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “பறை”. இப்பாடல் பிரபலங்கள் மற்றும் குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர் முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டது.

இவ்விழாவினில்…

ஒளிப்பதிவாளர் அர்ஜீன் பேசியதாவது…
இயக்குநர் குமரனை அவர் ஜடா படம் செய்யும் போதிலிருந்தே தெரியும், இந்த பாடலின் கரு சொன்ன போதே என்னை மிகவும் பாதித்தது, இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை தனலக்‌ஷ்மி பேசியதாவது…
இது என் முதல் மேடை, எனது அம்மாவிற்கு முதல் நன்றி. குமரன் அண்ணாதான் எல்லாமே சொல்லி தந்தார் அவருக்கு பெரிய நன்றி. இங்கு எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும் எனக்கு உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி

Think Music சார்பில் சந்தோஷ் பேசியதாவது….
Think Music படப்பாடல்களுக்கு மட்டுமில்லாமல் சுயாதீன பாடல்களுக்கு முக்குயத்துவம் தந்து வருகிறோம் அந்த வகையில் இந்த பாடல் ஒரு நல்ல முயற்சியாக சிறப்பாக அமைந்தததில் மகிழ்ச்சி. இந்த பாடலை பார்க்கும் போதே உணர்வுப்பூர்வமாக மனதை தாக்கியது. விஷுவலுக்கு ஏற்ற வகையில் ஷான் ரோல்டன் நிறைய நேரம் எடுத்து அட்டகாசமாக இசையமைத்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

பாடகர் ஶ்ரீனிவாஸ் பேசியதாவது…
ஷான் ரோல்டனின் மியூசிக் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவரை ரியாலிடி ஷோவில் இருந்தே தெரியும் அவரை அப்போதே பார்த்து வியந்திருக்கிறேன். இசையை அவர் மிக அதிகமாக காதலிப்பவர். அவர் இசையில் உயிர்ப்பை கொண்டு வருகிறார். ஜெய்பீம் மற்றும் இந்த பாடல் எல்லாம் அவர் உழைப்பில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சுதந்திரம் வாங்கிய இந்தியாவில் இன்னும் இந்த மாதிரி விசயத்தை பார்க்க கஷ்டமாக உள்ளது. ஆனால் இதனை நாம் திரும்ப திரும்ப சொல்லவேண்டும். ரசிகனாக இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

சவுக்கு சங்கர் பேசியதாவது
திரை சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தயக்கமாக இருந்தது. சமூகத்தில் உள்ள இழிவுகளை கலையும் பயணத்தில் கலைஞர்கள் திரையில் பயணிக்கிறார்கள், நான் அரசியலில் பயணிக்கிறேன். இந்த விசயங்களை சொல்வது அவசியம். ஒரு சக மனிதன் உயிரை விட்ட பிறகும் மதிக்கவில்லை என்பது நம் சமூகத்திற்கு இழிவு. இதை நாம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தவேண்டும், அப்போது தான் இது மீண்டும் நடக்காத நிலைக்கு நாம் செல்வோம். இந்த பாடலில் 2019 காலகட்டத்தில் உண்மையில் நடந்த சம்பவத்தை இறுதியில் இணைத்தது இந்த பாடலை இன்னும் உணர்வுப்பூர்வமாக மாற்றியுள்ளது. இந்த பாடல் இன்னும் பல்வேறு அடக்கப்பட்ட சமூகத்தினரை அவர்களின் கதையை சொல்ல தைரியம் தரும், அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றி

நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது…
முதல் ஷாட் பார்த்தவுடனே மனதை தாக்கிவிட்டது, சந்தோஷிடம் எனக்கு ஏன் இந்த மாதிரி தரவில்லை எனக்கேட்டேன், இதில் கல்லெரிவது போல் ஒரு ஷாட் இருக்கும் அப்போது நடிகை தனலக்‌ஷ்மி நடிப்பு பிரமாதமாக இருந்தது. இந்த விஷுவலுக்கு முழு உயிரையும் தந்துள்ளார் ஷான் ரோல்டன், அவர் ஒரு ஜீனியஸ். குமரன் இந்த பாடலிலேயெ அழுத்தமான கதையை சொல்லியுள்ளார், பிரமாதம் அவரது அடுத்த படத்திற்கு வாழ்த்துக்கள். தனிமைப்படுத்துவது எத்தனை கொடுமை என சொல்லியிருக்கிறார். எல்லா மனிதர்களும் ஒன்று தான் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் த செ ஞானவேல் பேசியதாவது…
நான் ஷான் ரோல்டனுக்காக தான் வந்தேன் ஆனால் இங்கு வந்த பிறகு பாடல் என்னை மிகவும் தாக்கியது, இந்த பாடல் தரும் உணர்வு இந்த மாதிரியான சமூகத்தில் இருக்கிறோம் என அவமானமாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது. இயக்குநருக்கு குழுவினருக்கு வாழ்த்துக்கள், பறை என்றாலே சொல்லுதல் என்பது தான் ஆனால் இன்று பறையை பற்றியே சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இந்தப்பெயரே மிகவும் முக்கியமானது, கலை பரந்து பட்ட சக்தி அதை வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். எந்த கலை உங்களை சிந்திக்க வைக்கிறதோ அதுவே உண்மையான கலை. சுயாதீன பாடல்களுக்கு ஒரு சுதந்திரம் உள்ளது ஆனால் அதிலும் நாம் கம்ர்ஷியல் மட்டுமே சொல்கிறோமோ என தோன்றுகிறது. இந்த பாடல் தான் உண்மையில் வைரல் ஆக வேண்டும், Think Music இம்மாதிரியான பாடலை செய்வதற்கு நன்றி. ஷான் ஞானஸ்தன் என்று சொல்ல வேண்டும் அவர் ஒரு சமூக பொறுப்புள்ள இசைக்கலைஞன். நாங்களும் இம்மாதிரியான முயற்சிகள் செய்ய வேண்டும் என நினைத்தோம், அதற்கு இப்பாடல் ஊக்கமாக இருக்கிறது, எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது…
குமரனை ஜடா படத்தின் போதிலிருந்து தெரியும். அவரை சந்தித்தபோது அவர் இதை படமா எடுக்கனுமா இல்லை பாடலாக எடுக்கனுமா என்று யோசிக்கிறேன். எல்லோரும் இயக்குநராக படம் செய்யும் முயற்சிக்கையில் அதை விட்டு ஒரு கலையை எந்த வடிவில் சொல்வது என யோசிக்கிறாரே என அவரை எனக்கு பிடித்தது. 3 1/2 நிமிடத்தில் இந்த பாடலை அதன் வலியை சொல்லலாம் என முடிவு செய்தோம், அதற்கான நிறைய தடைகள் இருந்தது. என்னைவிட இதில் குமரனின் பங்குதான் அதிகம், நடிகை தனலக்‌ஷ்மி அட்டகாசமாக நடித்திருந்தார். தொடர்ந்து எனது பணி என்பது இந்த வலியை உணராதவர்களுக்கு எடுத்து சொல்வதாக தான் இருக்கிறது. குமரனின் மாதிரியான இயக்குநர்கள் இந்த மாதிரி விசயத்தை முன்னெடுக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் எந்த விதத்திலாவது நான் உடனிருப்பேன் நன்றி.

இயக்குநர் குமரன் பேசியதாவது…,
‘பறை’ 6 நிமிட ஆல்பம் ஆனால் அதற்குள் நிறைய விசயங்கள் இருக்கிறது. இந்த ஆல்பம் எடுக்கலாம் என முடிவு செய்த பிறகு, இதனை பிரமாண்டமாக முன்னெடுக்கலாம என என்னுடன் இணைந்து பயணித்த தயாரிப்பாளர்களுக்கு, குழுவிற்கு நன்றி. நான் விஷுவல் எடுத்து வந்து ஷான் அவர்களிடம் கொடுத்துவிட்டேன், அவர் கொஞ்சம் பொறுங்கள் என்றார் அப்புறம் ஒரு நாள் இந்த பாடலை போட்டு காட்டினார் அட்டகாசமாக இருந்தது. உங்களுக்கு நன்றி. படத்திற்கு உங்களிடம் தான் வருவேன். இந்த பாடலில் தனலக்‌ஷ்மி அத்தனை அற்புதமாக ஒத்துழைப்பு தந்து நடித்தார். அவருக்கு வாழ்த்துக்கள். Think Music இதனை பெரிய
இடத்திற்கு எடுத்து செல்வதற்கு நன்றி. பறை இதனை உங்கள் முன்னால் எடுத்து வந்துவிட்டோம் நீங்கள் தான் இதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் நன்றி.