ஆலன் ; விமர்சனம்


மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் வெற்றி தனது குடும்பத்தாரின் சூழ்ச்சியால் தந்தையை பறி கொடுக்கிறார். தான் நேசித்த காதலியும் இழந்துவிட்டதாக அவருக்கு தெரிய வர பித்து பிடித்த மனநிலையுடன் அவர் இலக்கில்லாமல் பயணித்து காசிக்கு சென்று அடைகிறார். அங்கே சாமியாராக ஹரீஷ் பெராடியிடம் சீடனாக சேர்ந்து ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ள நினைக்கிறார். ஆனால் அவரால் ஆன்மீகத்தில் முழு மனதாக ஈடுபட முடியவில்லை.

அவருக்குள் தான் ஒரு எழுத்தாளனாக ஆக வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதை கண்டு கொண்ட ஹரிஷ் பெராடி முதலில் உன் மனதிற்குள் இருக்கும் ஆர்வத்தை நிறைவு செய்து எழுத்தாளனாக மாறு. அதன் பிறகு உனக்கு ஆன்மீகம் தானாகவே வசப்படும் என்று கூறி அனுப்பி வைக்கிறார். அங்கிருந்து கிளம்பி வரும் வழியில் இங்கே தமிழ் படிக்க வந்த ஜெர்மன் பெண்ணான மதுராவை ரயிலில் பார்த்ததுமே காதல் கொள்கிறார். திருமணத்திற்காக முயற்சி செய்யும் வேலையில் எதிர்பாராத விதமாக மதுரா சில கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழக்கிறார்.

இதனால் இன்னும் அதிர்ச்சியாகும் வெற்றி ஒரு கட்டத்தில் எழுத்தாளராக மாறுவதற்கான வேலைகளில் இறங்குகிறார். அவர் எழுத்து துறையில் சாதித்தாரா ?அதன் பிறகு மீண்டும் ஆன்மீகத்தை நோக்கி அவரது கவனம் திரும்பியதா ? அங்கே சென்று அவரால் ஆன்மீகத்தை தனது வசப்படுத்த முடிந்ததா என்பது மீதி கதை.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் வெற்றிக்கு இந்தப்படமும் அந்த விதமான் அஒரு படம் தான்ஒரு சந்நியாசி போன்ற அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் தன்னாலான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

வெற்றியின் வாழ்க்கையில் குறுக்கிடும் மதுரா மற்றும் அனு சித்தாரா ஆகிய இரண்டு பேரின் நடிப்பும் மிகச்சிறப்பு. அதிலும் மதுரா பர்ஸ்ட் மார்க் வாங்குகிறார்.

காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ் பல ஊர்களையும் மனதில் பதிய வைக்கிறது விந்தன் ஸ்டாலின் கேமரா. அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா தன் இசைத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவனிக்க வைக்கிறார்.

எழுத்தும், காதல், ஆன்மீகம் ஆகியவை படத்தின் மிக முக்கிய அம்சங்களாக வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் சிவா.ஆர் அதற்கான திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம். சில லாஜிக்குகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால் இந்த ஆலன் உங்களுக்கு சுவராஸ்யமாகவே தெரிவான்.