அரியவன் ; விமர்சனம்

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் அரியவன். இந்த படத்தில் இஷோவோன், டேனியல் பாலாஜி, பிரனாலி கோகரே, சத்யன், சுப்பிரமணி உட்பட பல கோகரே, நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். விஷ்ணு ஸ்ரீ இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

கபடி வீரர் ஈஷானுக்கும் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த பிரணாலிக்கும் காதல் மலர்கிறது. டேனியல் பாலாஜி சில இளைஞர்கள் மூலம் இளம்பெண்களை காதல் என்ற போர்வையில் ஏமாற்றி படுக்கையில் நாசம் செய்து வீடியோ எடுக்கிறார். அந்த வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி பிரபலங்களுக்கும் பெண்களை சப்ளை செய்கிறார்.

அந்த கும்பலிடம் பிரணாலியின் தோழியும் சிக்கி தற்கொலைக்கு முயல்கிறார். தோழிக்கு உதவ காதலன் ஈஷானை நாடுகிறார் பிரணாலி. காதல் பெயரில் ஏமாற்றிவன் கையை ஈஷான் வெட்டுகிறார். இளம்பெண்களின் பாலியல் வீடியோக்களையும் கைப்பற்றுகிறார். இதனால் ஈஷானை கொலை செய்ய டேனியல் பாலாஜி ஆட்களை இறக்குகிறார். அவர்களிடம் இருந்து ஈஷான் எப்படி தப்புகிறார். பாதிக்கப்பட்ட பெண்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.

புதுமுக நாயகன் இஷான் ஒவ்வொரு காட்சியிலும் ஆர்ப்பாட்டம் இல்லாத யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார். வில்லன்களை அடித்து நொறுக்கும் சண்டை காட்சிகளில் வேகம்.

நாயகி பிரணாலிக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரம் அதை நன்றாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். இவர்களை தொடர்ந்து படத்தில் வில்லனாக வரும் டேனியல் பாலாஜி தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வி.வி.யின் பின்னணி இசையும், விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.ஆரம்பத்தில் படம் மெதுவாக செல்வது போல் இருந்தாலும் இரண்டாம் பாதியில் நன்றாக சென்றது.

மேலும், பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் அரியவன் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *