முன் பின் அறிமுகமில்லாத ஜெய், யோகி பாபு குடும்பத்தினர், அவரவர் கைக்குழந்தையுடன் ஒரே விமானத்தில், வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வருகின்றனர். இந்தியாவை அடைந்த பின்னர், மதுரை செல்லும் விமானத்தில் யோகி பாபுவும், கோயமுத்தூர் செல்லும் விமானத்தில் ஜெய்யும் செல்கின்றனர். விமான நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் சமயத்தில் யோகி பாபு மற்றும் ஜெய் தம்பதியினர் குழந்தைகள் மாறுகிறது இந்த குழந்தைகள் எப்படி மாறுகிறது மீண்டும் இந்த குழந்தைகள் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை கரு.
ஏற்கெனவே நகைச்சுவை கலந்து நாயகனாக நடித்து வெற்றி பெற்றிருக்கும் ஜெய்க்கு இந்தப்படத்திலும் அது போன்றதொரு வேடம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் மற்ற படங்களை காட்டிலும், இப்படத்தில் ஜெய் சற்று நடிப்பில் மீட்டரை குறைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
மற்றொரு நாயகன் குணாவாக யோகி பாபு படம் முழுவதும் யதார்த்தமாக நடிப்பிலும், இடையிடையே ஒன்லைன் பஞ்ச்; நகைச்சுவை கலந்து தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார் வருகிற காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைக்கிறார்.
பிரக்யா நாக்ரா, சாய் தன்யா இருவரும் குழந்தைகளின் தாயாக நடித்து, பெண் ரசிகைகளை எளிதாக கவர்ந்து விடுகின்றனர். யோகி பாபுக்கு இணையாக நடித்திருக்கும் சாய்தன்யா பொருத்தம்
சத்யராஜ் தன் குடும்பத்திற்கு ஆண் வாரிசு தான் வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் மிக சரியான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். இளவரசு நடிப்பில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, ராமர் மற்றும் ஆனந்தராஜ் உள்ளிட்ட நடிகர்களும் கொடுக்கப்பட்டதை தெளிவாக செய்து முடித்திருக்கிறார்கள்.
டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை ரகம். பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் டி.பி.சாரதி படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
நகைச்சுவையோடு மூடநம்பிக்கையின் அறியாமையையும் இயக்குனர் பிரதாப் முதல் படத்திலேயே மிக அழகாக சொல்லி இருக்கிறார். திரைக்கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனத்தை செலுத்தியிருக்கலாம். ஆனாலும் சிரித்து மகிழ ஒரு நல்ல படம்