தேவரா ; விமர்சனம்


ஏற்கனவே டப்பிங் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஓரளவு பழக்கமான ஜூனியர் என்டிஆர் ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் இன்னும் அதிக அளவில் நெருக்கமானார். அந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் தேவரா. இது ரசிகர்களுக்கு எந்த அளவு விருந்தளித்து இருக்கிறது ? பார்க்கலாம்.

நடுக்கடலில் செல்லும் கப்பல்களில் இருக்கும் கடத்தல் பொருட்களை அவை என்னவென்று தெரியாமலேயே, கரைக்கு கொண்டு வரும் வேலையை என்.டி.ஆர் தலைமையில் கிராம மக்களில் சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆனால் கடத்தப்படுவது ஆயுதங்கள் என்பதையும், அதன் மூலம் பல அப்பாவி மக்கள் கொள்ளப்படுவதையும் அறிந்துக்கொள்ளும் என்.டி.ஆர், இனி அத்தகைய வேலையைசெய்ய கூடாது என்று முடிவு எடுக்கிறார்.

தன்னுடன் இருப்பவர்களையும் தடுக்கிறார். ஆனால அதையும் மேரி சிலர் செல்ல அவர்களுக்கு தண்டனை அழிக்கிறார். சைஃப் அலிகான் மற்றும் பிற கிராம வாசிகள் தேவராவை எதிர்த்து கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இதனால் ஒரு கட்டத்தில் தான் எங்கிருந்தாலும் கெட்ட நோக்கத்தோடு கடலுக்குள் வருபவர்களை நிச்சயம் அழிப்பேன், என்று எழுதி வைத்துவிட்டு கிராமத்தை விட்டே சென்று விடுகிறார்.

அதற்கடுத்து யார் கடலுக்கு சென்றாலும் உயிரோடு திரும்பி வருவதே இல்லை. இதனால் அனைத்து கிராம வாசிகளும் பயந்து கடலுக்கு சென்றால் தேவரா கொன்று விடுவார் என்ற அச்சத்தில் இருக்கின்றனர். ஆனாலும் என்.டி.ஆரை அழிப்பதற்கான வாய்ப்பையும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவரைப்போன்ற உருவத்தோற்றத்துடன் மகன் ஜூனியர் என்டிஆர் வர, புதிய திட்டம் போடும் எதிரிகள், தங்களது கூட்டத்துடன் மகன் என்.டி.ஆரை கடலுக்குள் அனுப்பி தந்தையை வளைக்க நினைக்கிறார்கள். அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

தந்தை மகன் என ஜூனியர் இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். முதல் பாகம் முழுவதும் அப்பாவையும் இரண்டாம் பாகம் மகனையும் மையமாக வைத்து நகர்கிறது. அதிரடி ஆக்‌ஷனோடு அப்பா என்.டி.ஆர் அமர்க்களப்படுத்த, பயம், காதல் ஆகியவற்றின் மூலம் மகன் என்.டி.ஆர் அசத்துகிறார். கப்பலில் கடத்தலில் ஈடுபடும் காட்சிகள் , ஆயுத பூஜையின் போது நடக்கும் போட்டி ஒரே ஆளாக ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டைபோடும் காட்சிகள் நேர்த்தியாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்.டி.ஆர்.

தெலுங்கில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் ஜான்வி கபூர். ஆனாலும் அவரை வீணடித்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். பல வருடங்களாக பழிவாங்க வன்மத்தைத் தேக்கி வைத்திருக்கும் வில்லன் கதாபாத்திரம் சயிஃப் அலிகானுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.

பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சைன் டாம் ஜாக்கோ, நரேன், கலையரசன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு கடல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிரட்டி உள்ளார். குறிப்பாக. படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் கற்பனைக்கு மீறியதாக இருந்தாலும் அதை தனது கேமரா மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களை விட பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

கடல் மற்றும் கடற்கொள்ளையை வாழ்வாதாரமாக கொண்டு இருக்கும் மக்களின் கதையை மையமாக வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் கொரட்டால சிவா. படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அது படத்தின் இரண்டாம் பாதியில் இல்லாதது பலவீனம். மாஸ் கமர்ஷியல் பொழுதுபோக்கு படத்திற்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் இதில் பார்க்க முடிந்தாலும் ஏனோ முழு நிறைவை இந்தப்படம் தரவில்லை என்றே சொல்லலாம். ஆனால் கமர்ஷியல் பிரியர்களுக்கு இந்தப்படம் ஸ்பெஷல் மீல்ஸ் தான்