கதையின் நாயகனாக தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த சூரி இந்த கொட்டுக்காளி படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்திருக்கிறாரா ? பார்க்கலாம்.
சூரிக்கும் அவருடைய முறை பெண் மீனவான அன்னா பென்னுக்கும் திருமணம் முடிவாகிறது. ஆனால் யாரிடமும் பேசாமல் அமைதியாக வெறித்த பார்வையுடன் இருக்கும் அவருக்கு பேய் பிடித்திருப்பதாக குடும்பமே நம்புகிறது. அதைத் தொடர்ந்து பேய் ஓட்ட செல்கிறார்கள். தங்கள் ஊரிலிருந்து சாமியாரிடம் சென்று சேருவது வரையிலான இஅவர்கள் பயணம் தான் மீதிப்படம். இந்தப் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கிறது? மீனாவின் பேய் நீங்கியதா? உண்மையிலேயே யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது? என பல முடிச்சுக்களை சுவாரஸ்யமாக அவிழ்த்திருக்கிரார்களா என்பதை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து கொள்ளுங்கள்
நாயகன் சூரி, தான் ஒரு கைதேர்ந்த நடிகர் என்பதை விடுதலை, கருடன் படங்களுக்குப் பிறகு மீண்டும் ஆணித்தனமான நடிப்பைக் கொடுத்து நிரூபித்திருக்கிறார். அதிலும் தொண்டை கட்டிய குரலில் பேசியிருப்பது இந்த கதாபாத்திரத்திற்காக அவர் எவ்வளவு மெனக்கெட்டு உள்ளார் என காட்டுகிறது.
நாயகியாக நடித்திருக்கும் அன்னாபென், கண்களிலும் கண்ணசைவுகளிலும் சின்னச் சின்ன முகம் திருப்பலிலும் பார்வையாளர்களுக்கு ஏதாவது ஓர் உணர்வைக் கடத்தியிருக்கிறார்
பின்னணி இசை இல்லாமல் கதையோட்டத்தில் ஏற்படும் சப்தங்களை வைத்து படத்தை கொண்டு சென்றுள்ள இயக்குனரின் புது முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும். கதை மாந்தர்களை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்தி
மிக எதார்த்தமான முறையில் காட்சிகளை நகர்த்தி செல்லும் இயக்குநர் வினோத்ராஜ், பல காட்சிகளை மிக நீளமாக படமாக்கிஎதை தவிர்த்திருக்கலாம். அதேபோல கதை என்றால் அதற்கு ஒரு முடிவை இயக்குநர் சொல்லவேண்டும். ஆனால் க்ளைமாக்ஸ் காட்சியில் எந்த ஒரு முடிவும் சொல்லாமல் மக்களிடமே விட்டுவிடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்றபடி நல்லபடம் தான்.