பி.டி.சார் ; விமர்சனம்

நாயகன் ஹிப்ஹாப் ஆதி ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றுகிறார் அவரது வீட்டிற்கு எதிரில் வசிக்கும் கல்லூரி மாணவியான அனிகா சுரேந்திரன் திடீரென ஒருநாள் தற்கொலை செய்துகொள்கிறார் ஆனால் அது கொலை என ஒரு கட்டத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு தெரியவருகிறது..

ஜாதக ரீதியாக அவர் எந்த வம்பு தும்புக்கும் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக ஆதியின் அம்மா தேவதர்ஷினி அவரை கவனமாக வளர்த்தாலும் அனிகாவின் மரணத்தால் ஆவேசமாகும் ஆதி, தற்கொலை அல்ல கொலை என்று வழக்கு தொடரும் ஹிப் ஹாதி, அதற்கு காரணமான தியாகராஜனை எதிர்த்து போராட, அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஆதி சிறப்பாக நடித்து இருக்கிறார். அநீதிகளைக் கண்டு ஆரம்பத்தில் பயந்து ஒதுங்குவது, அனிகாவுக்கு பிரச்சினை என்றவுடன் வெகுண்டு எழுவது என கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் தூள் பறத்துகிறார்.

ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஷ்மீரா பரதேசிக்கு நாயகனுக்கு துணை நிற்கும் கதாபாத்திரம்.பெரிய வேலை இல்லை என்றாலும், தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்கிறார். திரைக்கதையின் மையப்புள்ளியாக பயணித்திருக்கும் அனிகாவின் கதாபாத்திரம் மூலம் படத்தில் இடம்பெறும் திருப்பம் திரைக்கதையின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக நடித்திருக்கும் இளவரசு நேர்த்தியான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் சிறந்த குணசித்திர நடிகர் என்ற அடையாளத்தை புதுப்பித்துக் கொள்கிறார். பிரபு, மதுவந்தி, தேவதர்ஷினி, பாக்யராஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நாயகன் ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்திருக்கிறார்.அவருடைய பாணியில் அமைந்திருக்கிற பாடல்கள் கேட்கும் ரகம். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஓகே ரகம்.

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளை பற்றி பேசுகிறது இப்படம். அதற்காக இயக்குநர் கார்ஹ்திக் வேனுகொபாலனுக்கு நம் முதல் பாராட்டுக்கள். பாலியல் சுரண்டலால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இந்த சமூகம் கொடுக்கும் அழுத்தமும், நெருக்கடியும் அதிகம் என்று கூற முயற்சித்திருக்கும் இயக்குநர் அதனையும் பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிக்க தவறி இருக்கிறார்.