ரகு தாத்தா ; விமர்சனம்


வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே எழுத்தாளராகவும் இருக்கும் கீர்த்தி சுரேஷ் ஆணாதிக்கத்தை எதிர்க்ப்பதுடன் திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். ஆனால்.தனது தாத்தாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லுகிறார்.

தன்னுடைய எழுத்துகளை ரசிக்கும் ரவீந்திர விஜய்யை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார். ஆனால் தமிழ்ச்செல்வனும் பிற ஆண்களைப் போலவே பிற்போக்கு சிந்தனை கொண்டவராகவே இருப்பது கீர்த்தி சுரேஷுக்கு தெரிய வருகிறது. அதன்பின் எடுக்கும் முடிவுகள் என்ன?.என்பதுவே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் இந்தி திணிப்பை எதிர்ப்பதோடு, பெண்ணியம் பேசும் புரட்சிகரமான மங்கையாக வலம் வந்து, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

தமிழ் செல்வன் என்னும் கதாபாத்திரத்தில் ரவீந்திர விஜய் நடித்துள்ளார், இவர் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் குறைவின்றி நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் தாத்தாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், தன்னால் முடிந்தவரை ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

படத்தில் காமெடி காட்சிகள், குறிப்பாக கீர்த்தி சுரேஷ் மற்றும் திவ்யதர்ஷினி இணைந்து நடிக்கும் காட்சிகள் மக்களை நன்றாக சிரிக்க வைத்துள்ளன.

எழுதி இயக்கியிருக்கும் சுமன் குமார், இந்தி திணிப்பு மற்றும் அதற்கு எதிரான போராட்டத்தை கதைக்களமாக எடுத்துக்கொண்டாலும் எந்த இடத்திலும் சர்ச்சையான விசயங்களை பேசாமல் நகர்ந்துள்ளார்.அதனால் படம் சீரியஸாகவும் இல்லாமல், நகைச்சுவையாகவும் இல்லாமல் ஒரு சீரான ட்ராக்கில் செல்கிறது