இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் யோகி பாபு, திலீபன், ரெடிங் கிங்சிலீ, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா, ப்ரியா போன்ற பல நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஷூ. டைம் டிராவல் கான்செப்டில் இந்த படம் உருவாகியுள்ளது.
படத்தில் நாயகன் திலீபன் அவர்கள் ஒரு டைம் ட்ராவல் மெஷினை பொருத்திய ஷூ ஒன்றை தயாரிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக போலீசுக்கும் இவருக்கும் இடையே ப்ரச்சனை ஏற்படுகிறது. அதில் துப்பாக்கி கொண்டு நாயகன் திலீபன் கழுத்தில் பாய்கிறது. இதனால் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அது மட்டும் இல்லாமல் தாம் கண்டு பிடித்த டைம் டிராவல் சூவை திலீபன் ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு செல்கிறார்.
திலீபன் மறைத்து வைத்திருந்த ஷூ, செருப்பு தைக்கும் தொழிலாளி ஆன அந்தோணி தாசனின் மகள் பிரியாவிடம் சிக்குகிறது. அவரிடம் இருந்து யோகி பாபுவின் கைக்கு அந்த ஷூ செல்கிறது. ஷூ வந்த நேரம் யோகி பாபுவின் வாழ்க்கையே மாறுகிறது. யோகி பாபு அடுத்த கட்டத்திற்கு செல்கிறார் என்றே சொல்லலாம். இதற்கிடையில் 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி வருகிறது ஒரு கும்பல்.
அந்த கும்பலிடம் குடிகாரரான அந்தோணி தாசன் தன்னுடைய மகள் பிரியாவையும் விற்று விடுகிறார்.
இந்த நிலையில் பிரியாவின் வாழ்க்கை என்னானது? கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டார்களா? இறுதியில் இந்த ஷூவை திலீப் கைப்பற்றினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.
இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை சுற்றி கதை நகர்கிறது. டைம் டிராவல் கான்செப்டில் தமிழ் திரை உலகில் எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது. ஆனால், இந்த படத்தில் ஷூ வில் டைம் ட்ராவல் மெஷினை வைத்து வித்தியாசமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். டெக்னிக்கலாக இந்த படத்தை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் கல்யாண்.
யோகி பாபு சும்மா உதார் காட்டும் ரவுடியாக வருகிறார். அவர் வருகிற சீன்களில் எல்லாம் தியேட்டரில் ஆரவாரம். கடத்தப்படும் சிறுமிகளை மீட்கும் கதைநாயகனாக திலீபன் வருகிறார். இவர் கடத்தல் ஆசாமிகளுடன் மோதும் சண்டை காட்சி, இருக்கை நுனியில் உட்கார வைக்கிறது.
சிறுமி பிரியாவாக வரும் ப்ரியா கல்யாண், கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு.
சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை, படத்திற்கு பலம்.