சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமார், செயலாளராக குஷ்பு சுந்தர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்!!
சென்னை, அக்டோபர், 11: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை மேற்கு மாம்பலம், வி.எம்.ஏ. திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு நடிகை ஆர். ராதிகா சரத்குமார் தலைமை வகித்தார், கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் தலைவராக நடிகை ஆர். ராதிகா சரத்குமார், செயலாளராக நடிகை குஷ்பு சுந்தர், பொருளாளராக டி.ஆர். பாலேஷ்வர், துணைத்தலைவர்களாக நடிகை குட்டி பத்மினி, சுஜாதா, விஜயகுமார், இணை செயலாளர்களாக ஈ.ராமதாஸ், டி.வி.சங்கர், தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக பி.ராதா, சுஜாதா கோபால், வினயா கிருஷ்ணன், பி. சீனிவாசன், மனோபாலா, எஸ்.சுந்தர், பி. சீனிவாசலு, ஏ.எஸ்.வெங்கடாசலம், ஜி. ஜெயக்குமார், செய்யாறு ரவி, கே.ஜி. ஜெயவேல், ஆர்.சதீஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் காப்பாளர்களாக ஏ.வி.எம். சரவணன், டி.ஜி. தியாகராஜன், அழகன் தமிழ்மணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் அட்டைகளை தலைவர் ராதிகா சரத்குமார் வழங்கினார். முடிவில் பொருளாளர் டி.ஆர். பாலேஷ்வர் நன்றி கூறினார். புதிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார்கள்.