தண்ணீரை எரிபொருளாக கொண்டு வாகனங்களை இயக்கும் முறையை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி மாதவன், தனது கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதற்காக வாங்கிய கடன் கழுத்தை நெரிக்கிறது. அவரது மனைவி நயன்தாரா, கணவரின் லட்சியத்திற்கு உறுதுணையாக பயணித்தாலும்,. திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கிறார். அதற்கான கடைசி முயற்சியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்கிறார்.
இன்னொரு பக்கம் சென்னையை சேர்ந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சித்தார்த். சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் இருக்கும் அவரை, ஓரங்கட்ட நினைக்கிறது போர்டு. சென்னையில் நடக்கும் இந்தியா -பாகிஸ்தான் மேட்சில் தன்னைநிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. இதற்காக மனைவி, மகனைக் கூட கவனிக்காமல் இருக்கிறார். சயின்டிஸ்ட்டான சரவணன்(மாதவன்), தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் என்ஜினை கண்டுபிடித்து விட்டு, அங்கீகாரத்துக்காக அரசிடம் போராடி வருகிறார்.
இவர்கள் மூவரது பிரச்சனைகளும் ஒரே மையப்புள்ளியில் எப்படி இணைகிறது. இவர்கள் மூவருக்குமே தீர்வுகள் கிடைத்ததா ? என்பது மீதிகதை.
விஞ்ஞானியாக மாதவன், அவரின் மனைவியாக நயன்தாரா மற்றும் கிரிக்கெட் வீரராக சித்தார்த், அவரின் மனைவியாக மீரா ஜாஸ்மின் இந்த நான்கு பேரைச் சுற்றித்தான் கதைக்களம் நகர்கிறது. மனைவியுடனான காதல், முக்கியமான இடத்தில் வேறு முகத்தைக் காட்டுவது என பல இடங்களில் நன்றாகவே தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வழக்கம் போல் தனது கேரக்டருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை தெளிவாக செய்து முடித்திருக்கிறார் மாதவன்.
குழந்தையில்லாத ஏக்கம், கணவரின் குற்றச் செயலை தடுக்கிற வேகம், தன் பிரச்சனையைத் தீர்க்க பணம் கிடைக்குமென்றால் கணவனின் குற்றச் செயலுக்கு ஆதரவு தர முடிவெடுத்தல் என நடிப்பில் கலவையான உணர்வுகளை கொட்டிக் குவித்திருக்கிறார் குமுதாவாக வருகிற நயன்தாரா.
சித்தார்த், தோல்வியால் துவண்ட ஒரு வீரராக தனது கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்துள்ளார் அவரது மனைவியாக. மீரா ஜாஸ்மின், உணர்ச்சி மிகுந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். சித்தார்த்தின் மகனாக வரும் அந்தச் சிறுவன் வரும் காட்சியில் எல்லாம் அதிசயிக்க வைக்கிறான்.
இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் விரஜ் சிங் கோஹில் கிரிக்கெட் போட்டிகளை காட்சிப்படுத்திய விதம், சினிமாத்தனமாக அல்லாமல் நிஜ கிரிக்கெட் போட்டியை பார்க்கும் உணர்வை கொடுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சஷிகாந்த், கதாபாத்திரங்களின் கட்டமைப்பு, அவர்களின் உளவியல் ரீதியான போராட்டங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்த விதம் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கிறது. ஆனால் டெஸ்ட் என்று பெயர் வைத்து விட்டதால் டெஸ்ட் மேட்ச்சைப் போலவே படம் நகர்ந்தாலும், மூன்று கதாபாத்திரங்களின் மனபோராட்டங்களை கிரிக்கெட் விளையாட்டுடன் சேர்த்து அமைத்திருக்கும் திரைக்கதை ஆரம்பம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை படம் பார்க்க வைக்கிறது.