கர்நாடகாவில் இருக்கும் கோலார் தங்க வயலின் உருவாக்கத்தைப் பற்றிய உண்மைக் கதையில் சில கற்பனைகளையும் கலந்து கட்டி ‘தங்கலான்’ படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித்
1850 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக பயணிக்கிறது இப்படத்தின் கதை. தனது மனைவி பார்வதி மற்றும் 5 பிள்ளைகளோடு வாழ்க்கை நடத்தி வருபவர் தங்கலான் (விக்ரம்). சொந்தமாக சிறிதளவு விவசாய இடத்தில் விவசாயம் செய்து வந்தவர், அதிகாரத்தால் அந்நிலத்தை பறித்து விடுகிறார் மிராசு. அவருக்குக் கீழ் அடிமைகளாக விக்ரமும் அவரது குடும்பத்தாரும் வேலை பார்த்து வருகின்றனர். அந்த சமயத்தில் அந்த ஊருக்கு வரும் ஒரு ஆங்கிலேய அதிகாரி விவசாய அடிமைகளை மீட்டு, தங்கம் தேடி அவர்களை அழைத்துப் போகிறார். அவரை நம்பி தங்கலானும் அவரது ஊர்காரர்களும் பயணப்படுகிறார்கள். அதன்பின் என்ன நடந்தது, அவர்களது வாழ்க்கையில் மாற்றம் வந்ததா என்பது மீதிக்கதை.
தங்கலான் என்ற நாயகக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். நீளமாய் வளர்ந்த தாடி, மீசை, தலைமுடியுடன், சட்டை அணியாமல், இடுப்பிலிருந்து முழங்கால் வரையிலான வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, அழுக்குப் படிந்த திறந்த உடம்புடன், அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே உருமாறிய தோற்றத்தில் ஏறக்குறைய படம் முழுக்க தோற்றம் தருகிறார். மட்டுமின்றி நடை, முகபாவனை உள்ளிட்ட உடல்மொழியை இதற்குமுன் இல்லாத வகையில் முழுமையாக மாற்றி, அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிப்படுத்தி, தன் கதாபாத்திரத்துக்கு சரியான இமேஜையும் உயிர்ப்பையும் கொடுத்திருக்கிறார்.
பூ பார்வதி விக்ரமுக்கு மனைவி. நடிப்பில் அவரையே மிஞ்சிய நாயகி. முக பாவங்களும் உடல் மொழிகளும் அட அட அட.. பார்வதிக்கு இணை பார்வதியே. மேலாடை அணியாமல் வாழும் பழங்குடி இனத்தில் முதல்முறையாக மேலாடையான ஜாக்கெட்டை அவர் போட்டு அழகு பார்ப்பது தனி அழகு. தேசிய விருதுக்கு இவர் பெயரும் இடம்பெறும் என்பதில் நமக்கு ஐயமில்லை.
மாளவிகா சூனியக்காரி.. வித்தியாசமான மேக்கப்பில் வித்தியாசமான கணீர் குரலில் கத்தி கத்தி பேசுவது ஆணுக்கு இணையான வில்லி இறுதியில் நாயகி அந்தஸ்தை பெற்று விடுகிறார். இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் இடத்தில் பசுபதி. தன் தனித்திறமையால் தன்னை கவனிக்க வைக்கிறார்.
கிஷோர்குமாரின் ஒளிப்பதிவும் ஒரு கதாப்பாத்திரமாகவே கடைசிவரையிலும் வலம் வந்திருக்கிறது. ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே தாறுமாறு தான்.
பா ரஞ்சித் படம் என்றால் நிச்சயமாக அரசியலும் ஜாதியும் கண்டிப்பாக இருக்கும். இந்த படத்தில் அது கொஞ்சம் மேலோங்கி இருக்கிறது. அதனாலேயே பீரியட் படம், நல்ல நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு, எல்லாம் இருந்தாலும் தான் சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகக் கடத்துவதில் கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.இருந்தாலும் புதிய முயற்சி மற்றும் அதற்கான கடினமான உழைப்பு போன்றவற்றால புதிய உலகத்திற்கு ரசிகர்களை அழைத்துச் சென்றிருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித்,