வாய்தா விமர்சனம்


வாராஹா சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், சி.எஸ்.மகிவர்மன் இயக்கத்தில் மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் உள்ளிட்ட நட்சந்திரங்கள் நடித்துள்ள படம் வாய்தா.

ஜாதி வேறுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமம். அங்கு துணி சலவை செய்யும் தொழிலாளி மு.ராமசாமி. வெவ்வேறு திசையில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொள்ளாமல் திரும்ப தடுமாறி தெரு ஒரத்தில் கடை நடத்தும் மு.ராமசாமி மீது மோதி விடுகின்றன.

அடிபட்டு கீழே விழுந்த ராமசாமிக்கு, வலது கையில் பலமாக அடிபடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவரை, ஊர் அரசியல்வாதி இழப்பீடு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறார். ஏழ்மையில் இருக்கும் அந்த முதியவரும் அவரது மகனும் இதற்கு சம்மதிக்கின்றனர். இன்னொரு பக்கம், ராமசாமி மீது மோதிய இன்னொருவர் தனது அரசியல் செல்வாக்கை காண்பிக்கிறார்.

இது குறித்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
சலவை தொழிலாளிகள் படும் கஷ்டத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இயக்குனர் மகிவர்மன். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது நீதிமன்றம் அவர்களுக்கு என்ன மாதிரியான ஒரு நிலையை உருவாக்கும் என்பதையும் அழகாக காட்டியுள்ளனர். ஒரு வழக்கின் தீர்ப்பு சரியான நேரத்திற்கு கிடைக்க வேண்டும், தீர்ப்பு தாமதமானால் அது ஏற்புடையது அல்ல என்று வாய்தா படத்தில் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர்.

மு. ராமசாமி மிக எதார்த்தமாக நடித்துள்ளார். புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் என அனைவரும் அவரவர் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

லோகேஸ்வரனின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளரின் சேதுமுருகவேல் அங்காரகனும் படத்திற்கு பலம்.

வாய்தா நிச்சயம் அனைவரும் பார்த்தே ஆக வேண்டிய படம்.