தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜீவா. சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியான காபி வித் காதல் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. காதல் படத்தை தொடர்ந்து தற்போது வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவா நடித்திருக்கிறார்.
இந்த படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஜீவா உடன் காஷ்மிரா, பிரக்யா, வி டிவி கணேஷ், கே எஸ் ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இளைஞர்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி கொண்டிருக்கும் நாயகன்(ஜீவா) முதலில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிய, பின் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவருடைய இந்த காதலாவது வெற்றி பெற்றதா இல்லையா? என்பதை நகைச்சுவை,ரொமான்ஸ் கலந்து சொல்லியிருக்கும் படமே “வரலாறு முக்கியம்”.
எப்போதுமே பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் “ஜீவா”வின் தோற்றம் இக்கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. அவருடைய இயல்பான நடிப்பின் மூலம் காதலிலும், காமெடியிலும் கலக்கியிருக்கிறார். நடனம், காமெடி, காதல், ரொமான்ஸ் என எல்லா ஏரியாவிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவா.
நாயகியாக வரும் கஷ்மிராவிற்கு இது முதல் படம், அதில் ஒரு நல்ல ரோல் அதை கச்சிதமாகவும், ரசிக்கும் படியாகவும் செய்திருக்கிறார்.
மேலும், படத்தில் ஜீவா மற்றும் வி டி வி கணேசன் இடைய நடக்கும் காமெடி கலாட்டாக்கள் எல்லாம் திரையரங்களில் கிளாப்ஸ், விசில்களையும் தெறிக்க விட்டிருக்கிறது.
பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக பொருந்தி இருக்கிறது. கதை பெரியதாக இல்லை என்றாலும் காமெடியாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சென்றிருக்கும் பாதியில் வரும் காமெடி போர்சன்களும் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை கலகலப்பாகவே படம் சென்று கொண்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவாவின் ஒரு சூப்பரான படமாக வரலாறு முக்கியம் அமைந்திருக்கிறது.