அஜித் படத்தின் ஆலோசகராக மாறிய ரங்கராஜ் பாண்டே


தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அஜித் அடுத்ததாக தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் மற்றும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்த பிங்க் இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இது.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். பாலிவுட்டில் வெற்றிகரமான தயாரிப்பாளராக 37 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வரும் ஸ்ரீதேவின் கணவரான. போனி கபூர், அஜித்தின் இந்தப்படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார். இந்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்த பூஜையில் கவனிக்கத்தக்க ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், சமீபத்தில் தந்தி டிவியில் இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டேவும் இந்த பூஜையில் கலந்துகொண்டது தான். இதுநாள் வரை அவர் எந்த சினிமா பட பூஜையிலும் கலந்துகொண்டது இல்லை.. இந்தநிலையில் அஜித் பட பூஜையில் அவருக்கும் முக்கியத்துவம் அளித்து, அழைக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது அஜித் படத்தில் பாண்டேவின் பங்கும் ஏதோ இருக்கப்போகிறது என்றே தெரிகிறது.