இயக்குனருக்கு சிபாரிசு செய்து விரட்டிய விஜய்சேதுபதி..!


பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் எஸ்.யூ.அருண்குமாருடன் இணைகிறார், விஜய்சேதுபதி. இப்படத்தில் அவரது மகன் சூர்யா அவரது மகனாகவே நடிக்கிறார். மனைவி கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருக்கிறார். மூன்றாவது முறையாக ஒரே இயக்குநரோடு பயணிக்கும் அனு பவம் எப்படி என கேட்டால் அதற்கு வித்தியாசமான பதில் சொல்கிறார் விஜய்சேதுபதி.

“அருண் என் குடும்பத்துல ஒருத்தன். நானும், அவனும் சேர்ந்து ‘பண்ணையாரும் பத்மினி’யும் உரு வாக்கினபோது அதை ரசனை யோடு செய்தோம். அடுத்து நீ வேற யார்கூடயாவது படம் பண் ணுடான்னு சொல்லிட்டேன். அவனும் போய்ப்பார்த்தான். எதுவும் செட் ஆகல. திரும்பவும் ‘சேதுபதி’ செய்தோம். பெரிய ஹிட். அது முடிந்ததும் நானே சில ஹீரோக்களிடம், ‘இவன் பிர மாதமா படம் பண்ணுவான்’னு சொல்லி அனுப்பினேன். அப்பவும் எதுவும் நடக்கல. சரி வாடா… என்ன நடக்குதோ நடக்கட்டும்னு இப்பவும் இணைந்தாச்சு. எங்க ளோட நட்புக் கதை வேறு. ஒரு ஃபிலிம்மேக்கரா அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப் படத்தை யும் அவன் ரொம்ப வித்தியாசமாக செய்திருக்கான். அது உங்களுக்கும் தெரிய வரும்” என்கிறார்.