தோல்விப்படத்துக்கு எதுக்குய்யா கிப்ட் தர்றீங்க..? விஜய்யை வறுத்த விநியோகஸ்தர்…!


பெரிய நடிகர்களின் படம் ஓடுகிறதோ இல்லையோ, ஒரேநாளில் இத்தனை கோடி வசூல் சாதனை, பத்துநாளில் நூறு கோடியை தாண்டியது என சக்சஸ் மீட், போஸ்டர்கள் என பயங்கர பப்ளிசிட்டியை அள்ளிவிடுகின்றனர்.. சம்பந்தப்பட்ட நடிகர்களோ படக்குழுவினரை அழைத்து பார்ட்டி வைத்து பரிசு பொருட்கள் தருவதும் வாடிக்கைதான்..

சமீபத்தில் பரதன் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்ற படம் பைரவா. இப்படம் திரைக்கு வந்த பிறகு வெற்றியை கொண்டாடும் விதமாக தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தங்க சங்கிலி, பிரேஸ்லெட் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

ஆனால், இதற்கு விநியோகஸ்தர் ஒருவர், படத்தை வாங்கிய நான் பெரும் நஷ்டத்துக்குள்ளானேன். ஆனால், விஜய் எப்படி தங்க செயின் பரிசளித்து கொண்டாடலாம் என்று கூறியுள்ளார்.. ஆனால் விஜய் தரப்பிலோ படத்தை உருவாக்க கடுமையாக பணியாற்றியவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக விஜய் மனமுவந்து கொடுத்த பரிசு தான் இது. படம் வெற்றி பெற்றதோ இல்லை தோல்வி அடைந்ததோ என்பதற்காக விஜய் அவ்வாறு செய்யவில்லை என விளக்கம் அளித்து வருகிறார்களாம்.