இனி இனிஷியல் போடவேண்டாம் ; இயக்குனர் முடிவு..!


தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் வாரிசாக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்.. அதனது முதல் படமான கீரிடம் முதல் அடுத்து வெளியாக இருக்கும் வனமகன் வரை இதே பெயரைத்தான் தான் டைட்டில் கார்டில் பயன்படுத்தி வருகிறார் விஜய்..

ஆனால் அடுத்ததாக அவர் இயக்க இருக்கும் படம் ‘கரு’ .. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் இருந்து தனது இனிஷியலை தூக்கிவிட்டு விஜய் என்கிற பெயரையே டைட்டில் கார்டில் இனி தொடர முடிவெடுத்து அதை பத்திரிகைகளிடமும் ஒரு வேண்டுகோளாக வைத்து விட்டார் ஏ.எல்.விஜ.. இல்லை இல்லை வெறும் விஜய்.