சிம்புவிடம் உள்ள ஸ்பெஷாலிட்டியே, யார் ஒருத்தர் பெரிய பிரபலமாக இருந்தாலும், நான்லாம் அவருக்கு முன்னாடியே என உதார் காட்டுவதுதான்.. சமீபத்தில் அப்படித்தான் அஜித் பற்றி தேவையில்லாமல் வாயை விட்டு அவரது ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி அதேபாணியில் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
“என்னைப் பல சர்ச்சைகள் சுற்றியிருந்தபோதிலும், ரஹ்மான் எனக்கு ஆதரவு அளித்தார், அது குறித்து என்னுடன் பேசவோ, அதுபற்றி கருத்து கூறவோ இல்லை. என்னை சிறுவயதிலிருந்தே அவருக்குத் தெரியும். சிறுவனாக இருக்கும்போது நான் அவரை பல முறை தொந்தரவு செய்துள்ளேன். ஆனால் அவர் என்னிடம் எப்போதும் கனிவாகவே இருந்துள்ளார். அன்பாகவே நடத்தியுள்ளார்.
தனது ஆம்னி வண்டியில் ’ரோஜா’ படத்தில் தான் போட்ட முதல் பாடலை என்னிடம் அவர் போட்டுக்காட்டியது இன்னும் என் நினைவில் உள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது என்னிடம் கருத்து கேட்டார். இந்த பணிவு தான் அவருடைய இன்றைய உச்ச நிலைக்குக் காரணம் என நினைக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக அல்ல, ஒரு மனிதராக அவரிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன்” என கூறியுள்ளார் சிம்பு.