கதை எழுதிவிட்டு திரைக்கதை அமைக்க திணறிய இயக்குனர்..!


‘ஆகம்’ என்கிற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் கோடீஸ்வரன் (பெயரும் அதுதானாம்.. படம் ரிலீசானபின்னும் அந்த பெயருக்கு தக்கபடி இருந்தால் சந்தோசம் தான்). இந்தப்படத்தை இயக்குனர் விஜய் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் அண்ணன்.. தடுக்கும் தம்பி என இந்தா கதையில் ஒரு மெசேஜ் சொல்லியிருக்கிறாராம்..

இந்தப்படத்தின் கதையை முதலில் ஒரு புத்தகமாக எழுதினாராம். அதை படித்த பலரும் இதை சினிமாவாக எடுக்கலாமே என அவரிடம் கூறினார்களாம்.. ஆனால் தனது கதைக்கு திரைக்கதை அமைப்பது கஷ்டமாச்சே.. என்ன பண்ணுவது என புரியாமல் திணறினாராம். அதன்பின் அவரது கோ டைரக்டரான தினேஷ் தான் இதற்கு திரைக்கதை எழுதினாராம்.

இந்த அளவுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் ஒரு அறிமுக இயக்குனர் பேசுகிறாரே.. அதுவே பெரிய விஷயம் தான். அப்படியானால் போஸ்டரில் திரைக்கதை என தனது பெயரையே போட்டுக்கொண்டதை தவிர்த்திருக்கவேண்டும்..