இல்லை இல்லைன்னு சொல்லிக்கிட்டே இப்படியா பண்ணுவாங்க…?


பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களின் செய்கைகளால், மக்கள் கவனத்தை ஈர்த்து இடைவிடாது தலைப்பு செய்திகளிலேயே இருந்தனர் ஆரவ்வும், ஓவியாவும். பிக்பாஸில் அவர்கள் இருவருக்கும் உருவான காதல் நாடறிந்த ஒன்று.. அவர்களுக்கு காதல் இன்னும் தொடர்கிறதா இலையா என்கிற விஷயமே இப்போதுவரை மர்மமாக உள்ளது. இந்த நிலையில் அவர்களது ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டமான செய்தி வந்திருக்கிறது. ஆம்.. ஆரவ் ஹீரோவாக நடித்துவரும் ‘ராஜபீமா’ படத்தில் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் ஆரவுடன் இணைந்து நடிக்கிறார் ஓவியா.

இந்த சிறப்பு கதாபாத்திரத்தில் ஓவியா நடிப்பதால் ஒட்டுமொத்த குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் நமக்கு இன்னொரு சந்தோஷம் கலந்த ஆச்சர்யத்தையும் அளிக்கிறார்கள். ஓவியா படத்தில் நடிப்பதோடு, ஒரு குத்துப்பாட்டுக்கு ஆரவ்வுடன் ஜோடியாக நடனம் ஆடுகிறார்.

கடந்த இரண்டு நாட்களாக பொள்ளாச்சியின் அழகிய பகுதிகளில் இந்த பாடல் வெற்றிகரமாக படம் பிடிக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதம் ஓவியா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மேலும் அவர் திரையில் தோன்றும் நேரம் படத்தின் ஸ்பெஷலாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்..