லிபர்ட்டி பஷீர் நிலைமை அபிராமி ராமநாதனுக்கு வராமல் இருந்தால் சரி..!


ஜி.எஸ்.டி வரியே மிகப்பெரிய சுமையாக இருக்கும்போது தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீதம் கேளிக்கை வரியை ரத்துசெய்யவேண்டும் என தீர்மானம் போட்டு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துவிட்டார் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்.

ஆனால் அதை எந்த முன்னறிவிப்பும் இல்லாது அட்லீஸ்ட் இந்த வெள்ளி வெளியான படங்கள் அடுத்த வேல்லிவரையிலாவது ஓடி காசு பார்த்துக்கொள்ளட்டுமே என்கிற பரந்த நோக்கம் இல்லாமல் தங்களைப்பற்றி மட்டுமே குறுகிய நோக்கத்துடன் சிந்தித்தே இப்படி ஒரு முடிவை அபிராமி ராமநாதன் எடுத்துள்ளார் என்பதே திரையுலகில் பலரின் வருத்தமாகவும், குற்றச்சாட்டாகவும் உள்ளது..

மலையாள திரையுலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இவரைப்போலத்தான், லிபர்ட்டி பஷீர் என்கிற தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஒருவர் இருந்தார். தான் தலைவர் என்கிற அகங்காரத்தில் தியேட்டர்களுக்கு சரிபங்கு லாபம் தரவேண்டும் என அடிக்கடி போர்க்கொடி தூக்கி திடீர் போராட்டம் நடத்தி திரையுலகை ஸ்தம்பிக்க வைத்ததார் லிபர்ட்டி பஷீர்.

அப்படித்தான் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து ஜனவரி 17 வரை கேரள தியேட்டர்களில் புதிய படங்களை வெளியிட விடாமல் முடக்கினார்.. ஆனால் நடிகர் திலீப் பல தியேட்டர் உரிமையாளர்களை பிரித்து புதிய கூட்டமைப்பை உருவாக்கி அதன் தலைவரும் ஆனார். இதனால் லிபர்ட்டி பஷீரின் கூடாரத்தில் இருந்து 95 சதவீதம் பேர் திலீப் பக்கம் சாய்ந்துவிட்டனர்..

விளைவு… லிபர்ட்டி பஷீர் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார்.. அவருக்கு சொந்தமாக திருவனந்தபுரத்தில் உள்ள லிபர்ட்டி காம்ப்ளெக்ஸ் தியேட்டரில் மொத்தம் 5 திரையரங்குகள் உள்ளன. இனி லிபர்ட்டி பஷீரின் தியேட்டர்களுக்கு மலையாள படங்கள் தரப்படமாட்டாது என திலீப் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால், தியேட்டர்களை இடித்துவிட்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்ட முடிவெடுத்ததுடன் சினிமாவுக்கும் முழுக்கு போட முடிவுசெய்துவிட்டாராம்.

எந்த சங்கத்திலும் பொறுப்பில் இருப்பவர்கள் அதிகமாக அஆத்ம் போட்டால் காலம் அவர்களை கட்டம் கட்டி உட்காரவைத்துவிடும் என்பதற்கு நம் கண் முன்னே சரத்குமார், ராதாரவி, கலைபுலி தாணு ஆகிய உதாரணங்கள் உண்டு.. அந்தவகையில் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்ட லிபர்ட்டி பஷீரின் நிலைமையை அபிராமி ராமநாதன் போன்ற மெகாமால் தியேட்டர் நடத்தி வருபவர்கள் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொண்டால் அவர்கள் எதிர்காலத்திற்கு நல்லது என இங்கேயுள்ள வியாபார புள்ளிகளும் ஸ்ட்ரைக்கை விரும்பாத சில தியேட்டர் அதிபர்களும் பேசிக்கொள்கிறார்களாம்.