பா. ரஞ்சித்தின் புதிய படத்தில் ஆர்யா ?


அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித்.

தற்போது பா.ரஞ்சித் குத்துச் சண்டையை மையப்படுத்திய புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கதையை ஆர்யாவிடம் கூறியுள்ளதாகவும். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

‘காலா’ திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும், பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது அதற்கு முன்பாக ஆர்யாவை வைத்து இயக்க உள்ள படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.