பிகினி உடையில் காஜல் – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

இந்நிலையில் மாலத்தீவிற்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கு எடுத்த புகைப்படங்களை தினமும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பிகினி உடையில் இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை காஜல் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.