திரைத்துறையில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் செக்ஸ் புகார்களாக கடந்த ஆண்டு மீ டூ இயக்கத்தின் மூலம் வெளியே வந்தன. ஆனாலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரிதாக ஆதரவுக்கரம் நீளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. அதன்பின் அதுபற்றிய பேச்சுக்களும் குறைந்தன.
இந்தநிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஷாலு தற்போது செக்ஸ் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஷாலு பதில் அளித்தபோது வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ’சினிமாவில் நீங்கள் செக்ஸ் தொல்லைக்கு ஆளானீர்களா?’ என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷாலு சமீபத்தில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்தார் என கூறியுள்ளார். இது திரையுலகில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.’.