சமீபத்தில் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா அர்னால்டை கூட்டிவந்தும் திருப்திகரமாக அமையவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த இயக்குனர் சங்கருக்கு மேலும் இன்று ஐ படத்தின் கதை மீடியாக்களில் வருவது கண்டு மேலும் எரிச்சல் அடைந்து வருகிறாராம் ..
கதை இதுதானாம் ….
விக்ரம் ஒரு சாதாரண விவசாயி. ஹீரோயின் எமி ஜாக்சசன் ஒரு பெரிய மாடல் அழகி. எமி மீது விக்ரமிற்கு காதல் ஏற்படுகின்றது. ஆனால் விக்ரம், எமியை நெருங்க முடியவில்லை.இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுக்கின்றார்.
இந்நிலையில் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடுக்கின்றார்.அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்கின்றார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திர தோற்றத்திற்கு மாற்றிவிட்டது. இருப்பினினும் மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்கின்றார். ஆனால் அதை பரிசோதனை செய்து பார்க்க ஆள் இல்லை. அந்த சமயத்தில் தான் விக்ரம் உபேனை சந்திக்கின்றார்.
விக்ரம் உடம்பில் அந்த மருந்தை செலுத்திய உடன் அழகிய வாலிபராக மாறுகின்றார். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கின்றார் விக்ரம். ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார். அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார்.ஆனால் கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்திற்கு மாறுகின்றார். எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதாக அவரை கடத்துகின்றார். ஆனால் இதற்கு காரணம் உபேன் தான் என கண்டுபிடிக்கின்றார்.
அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியுள்ளார். விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாறியுள்ளார்.இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூரவிலங்குகளாக மோதுகின்றனர். பின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம்மாறினாரா இல்லையா என்பது படத்தின் கதையாம் ..
இப்படி முழுக்கதையும் இதுதானா இல்லையா என்பது பற்றி சங்கர் தரப்பில் இருந்து இன்னும் எதுவும் தகவல் வராததால் ….
இதே திரைகதையில் கொரியன் படம், அல்லது ஹாலிவுட் படங்கள் ஏதாவது வந்திருக்கிறதா என்று புரளி கிளப்பும் படை இப்பொழுதே கொரியன், ஹாலிவுட் சிடி க்களை பார்த்து வருகிறதாம் ..