தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக நடித்து வரும் அதே வேளையில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தங்கை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் தங்கையாக நடித்திருந்தார்.
தற்போது விக்ரம் பிரபுவுடன் வானம் கொண்டடும் திரைப்படத்தில் தங்கையாக நடித்திருந்தார்.
சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த ஒரு பேட்டியில் எந்த ஹீரோக்களுடனும் வேண்டுமானாலும் தங்கையாக நடிப்பேன் ஆனால் விஜயுடன் மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் விஜயுடன் இணைந்து ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.