தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னணி நடிகர் நடிகைகள் அனைவரும் தற்போது வெப்சீரிஸ் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலிவுட்டில் ஆரம்பித்த இந்த வெப்சீரிஸ் மோகம் தற்போது தமிழிலும் தொடர்கிறது.
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் புதியதாக தமிழ் வெப் தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்த வெப் சீரியலுக்கு தற்போது சூழல் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக கதிர் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமேசான் ப்ரைம் நிறுவனம் இந்த தொடரை தயாரிக்கிறது.
ஏற்கனவே புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர்கள் இயக்கும் இந்த வெப் தொடருக்கும் ரசிகர்களிடம் இப்பொழுது வரவேற்பு ஏற்பட்டுள்ளது.