கடந்த வருடம் தனுஷ், அமலாபால் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது தானே இப்போதைய ட்ரெண்ட்.. அதற்கு வி.ஐ.பி படம் மட்டும் தப்பிவிடுமா என்ன? அந்தவகையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாகவும், கலைப்புலி தாணு படத்தை தயாரிக்கப்போவதாகவும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது..
ஒரு சிறிய மாற்றமாக வேல்ராசுக்கு பதிலாக ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவே இயக்குவார் என்பது உறுதியானது.. இதன் அடுத்தகட்டமாக இன்று இந்தப்படத்திற்கு பூஜைபோடப்பட்டு, சூப்பர்ஸ்டார் ரஜினி கிளாப் அடித்து படத்தை துவங்கிவைத்தார். இந்த நிகழ்வில் இதன் முதல் பாகத்தில் நடித்த சமுத்திரக்கனி, சரண்யா, அமலாபால், விவேக் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்..
ஆனால் தனுஷின் மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா மட்டும் இதில் கலந்துகொள்ளவில்லை.. இதற்கு காரணம் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அமலாபால் இதில் கலந்துகொண்டதால் தான் ஐஸ்வர்யா இந்த பூஜை நிகழ்வை தவிர்த்துவிட்டாராம் என கிசுகிசுக்கப்படுகிறது.