தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ என இரண்டு படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அந்த இரண்டு படங்களும் ஊற்றிக்கொள்ள அடுத்து படம் இயக்கும் முடிவுக்கு மூட்டை கட்டினார். சில தினங்களுக்கு முன் ‘சினிமா வீரன்’ என்கிற ஆவணப்படம் இயக்கப்போவதாக ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிபை வெளியிட்டார். இப்போது லேட்டஸ்ட் அறிவிப்பாக தான் சுயசரிதை எழுதி வருவதாக கூறியுள்ளார்.
தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள், மற்ற சிந்தனைகள், நியாபகங்களை தொகுக்க நினைத்தபோது தான் இந்த புத்தகத்துக்கான யோசனை வந்தது என கூறியுள்ளார். சுயசரிதை பாணியில் இருந்தாலும் வீட்டிலும், சமுதாயத்திலும் பெண்களின் பங்கு பற்றி தனது புத்தகம் பேசும் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா. நடந்ததை மறைக்காம சொல்றதுக்கு பேர் தானே சுயசரிதை.. அப்படின்னா எல்லாத்தையும் எழுதுவாரான்னு சில வாலுத்தனம் பிடிச்ச ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்களாம்.