ஆண்டுதோறும், பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் பகுதியில், கேன்ஸ் திரைப்பட விழா நடக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 71வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 8ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், தனது மகள் ஆராதயாவுடன் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், சென்ற இடத்தில் சும்மா இருக்காமல், மகளுக்கு உதடோடு உதடு (லிப் டூ லிப்) வைத்து முத்தம் கொடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்தப் புகைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர் ஒரு லெஸ்பியன் பெண் என்றும், குழந்தையுடன் செக்ஸ் உறவு நல்லது இல்லை என்றும், குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை என்றும் இன்ஸ்டாகிராமில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினசரி அம்மாவுக்கும், மகளுக்கு இடையில் இருக்கும் பாசத்தை ஒரு பாலியல் கோணத்தில் பார்ப்பது முட்டாள் தனமான ஒன்று. மகளை கட்டிப்பிடிக்கக் கூட, வெஸ்டர்ன் கலாச்சாரத்தை பின்பற்றுவதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மகளுக்கு அம்மா முத்தம் கொடுத்தது அவ்வளவு கிரிமினல் குற்றமா என்ன.?