தனுஷுக்கு நோ சொன்ன உலக அழகி.. ஒகே சொன்ன உள்ளூர் கிழவி..!


தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் பெண் கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லான கேரக்டர் என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி கேரக்டர் போல் இருக்கும் என்கின்றனர். அதனால் இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாராம் தனுஷ்.

இதற்காக அவரை அணுகியபோது முழுக்கதையைும் கேட்ட ஐஸ்வர்யா ராய், நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டாராம். அதன்பிறகே அந்த கேரக்டரில் நடிக்க ‘மின்சார கனவு’க்கன்னியான பாலிவுட் நடிகை கஜோலை ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தவகையில் மின்சார கனவு படத்திருக்கு பின்னர் 20 வருடங்கள் கழித்து தமிழில் நடிக்கிறார் கஜோல்.