தீரன் இயக்குனரை சமாதானப்படுத்திய அஜித்


சதுரங்க வேட்டை படத்தின் மூலம் முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர் இயக்குனர் ஹெச்.வினோத். இந்தப்படத்தின் வெற்றி உடனடியாக அவருக்கு கார்த்தியை வைத்து ‘தீரன் ; அதிகாரம் ஒன்று படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது.

இந்தநிலையில் அவர் அடுத்ததாக அஜித் படத்தை இயக்கவுள்ளார் என கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்தப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறாராம். அவர் அஜித்தை அழைத்து நம் கம்பெனியிடம் நல்ல இந்திப்படங்களின் ரைட்ஸ் உள்ளது.. அதில் ‘பிங்க்’ படமும் ஒன்று.. உங்களுக்கு அது செட்டாகும்.. அதையே நாம் ரீமேக் செய்யலாம் என கூறினாராம்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஹெச்,வினோத் என்னிடமே உங்களுக்கான கதை இருக்கும்போது நான் ஏன் ரீமேக் செய்யவேண்டும்.. தவிர ரிமேக்கை இயக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை எனஅஜித்திடம் கூறிவிட்டாராம்.

ஆனால் அஜித்திற்கோ ஹெச்.வினோத்தை விட்டுவிட விருப்பம் இல்லையாம். அதனால் வினோத்திடம் எனக்காக இந்தப்படத்தை நீங்கள் பண்ணி தாருங்கள்.. இந்தப்படம் முடிந்ததும் அடுத்து உங்கள் கதையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உடனே ஆரம்பித்துவிடுவோம் என சொல்லோ சமாதானப்படுத்தினாராம்.

தற்போது பிங்க் படத்தின் கதையை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வினோத், அப்படி உருவாகும் திரைக்கதை தனக்கும் அஜித்திற்கு திருப்தி அளித்தால் மட்டுமே அந்தப்படத்தை இயக்குவதாகவும் அஜித்திடம் முன்கூட்டியே சொல்லிவிட்டாராம்.