அஜித்தின் மச்சினியும் ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி மீண்டும் கதாநாயகியாக நடிக்க களம் இறங்கியிருக்கிறார் அல்லவா..? இங்கே தமிழில் விக்ரம் பிரபுவுடன் ஒருபடத்திலும் தனுஷுடன் ஒரு படத்திலும் கமிட்டாகிவிட்டார். அதேபோல மலையாளத்தில் குஞ்சாக்கோ போபனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்..
ஆனால் இந்தப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்னரே இவரை கன்னடத்தில் நடிக்கவைக்கும் முயற்சி நடந்தது. கன்னடத்தில் சுதீப்பை வைத்து ஒரு படம் இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார். அந்தப்படத்தில் ஷாமிலியை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவுசெய்தார் நாட்டாமை இயக்குனர்.
ஒருகட்டத்தில் இதற்காக போட்டோஷூட் எடுக்கவேண்டும் என ஷாமிலியை வரவழைத்த இயக்குனர், கவர்ச்சியாக நடிக்கவேண்டி இருக்கும் என்று கூறி படு கிளாமரான போஸ்களில் ஸ்டில்களை எடுத்தாராம். மச்சினி மூலமாகவே இந்த விஷயம் அஜித்துக்கு தெரியவர, அந்த ஸ்டில்களை வரவழைத்து பார்த்தாராம்..
பார்த்ததும் டென்சனான அஜித் கே.எஸ்.ரவிக்குமாருடனான தனது பழைய ‘வரலாறு’ மறந்து நிமிடத்தில் ‘வில்லன்’ஆக மாறிவிட்டாராம். போனில் அவரை பிடித்து, கொஞ்சம் காட்டமாகவே அவருடன் வாக்குவாதம் பண்ணிய அஜித், உங்கள் படத்தில் ஷாமிலி நடிக்க மாட்டார் என அப்போதே பட்டென சொல்லிவிட்டாராம். அதன்பின்னர்தான், தானே மச்சினியை வைத்து போட்டோஷூட் நடத்தி அந்த ஸ்டில்களைத்தான் மற்ற கம்பெனிகளுக்கு கொடுத்தாராம்.