ரொம்ப நாள் கழித்து விஜய், அஜித் இருவருடனும் ஒரே நேரத்தில் மாறிமாறி நடிக்கும் வாய்ப்பு ஸ்ருதிஹாசனுக்கு மட்டும் தான் கிடைத்தது. ஆனால் அதை சரியானபடி பயன்படுத்தாமல் கெட்டபெயரை சம்பாதித்துக்கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.. விஜய்யுடன் நடித்த ‘புலி’ படத்தில் ஒரு வழியாக நடித்து கொடுத்துவிட்டார் ஸ்ருதி.
ஆனால் அஜித் பட ஷூட்டிங்கிற்கு தான் சரியானபடி கால்ஷீட்டை கடைபிடிக்காமல் இஷ்டத்துக்கு சொதப்புகிறார் என்கிறார்கள் அந்த யூனிட்டில் வேலைபார்க்கும் சிலர்.காரணம் இந்தியில் இப்போது இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதி, தேதிகளை அந்தப்படங்களுக்கு வாரி வழங்கியுள்ளாராம்..
காரணம் அவர்களின் ஒப்பந்தம் அப்படி.. அதை மீறமுடியாது. ஆனால் நம் தமிழ் ஆட்களை எப்படியாவது சொல்லி சமாளித்துக்கொள்ளலாம் அல்லவா..? மேலும் இவர் நடித்த இன்னொரு இந்திப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் நடந்துவருவதால் அந்தப்படத்தின் புரமோஷனுக்காகவும் அடிக்கடி மும்பை பறந்து விடுகிறாராம்.
உலகநாயகனின் வாரிசு என்பதால் பல்லை கடித்துக்கொண்டு, ஸ்ருதி வரும் நாட்களில் அவரது காட்சிகளை எடுத்துக்கொள்கிறார்களாம். ஏற்கனவே அஜித் படத்தில் நடிப்பதற்காகத்தான் கார்த்தியுடன் நடிக்க இருந்த படத்தைக்கூட சொல்லாமல் கொள்ளாமல் கழட்டிவிட்டு ஓடினார். இப்போது ‘தல’ படத்தையே இப்படி டீலில் விடுகிறாரே என சக நடிகைகள் ஆச்சர்யப்படுகிறார்களாம்.